LOADING

Type to search

சினிமா

நடிகர் சிவாஜி கணேசன் நடித்த `திருவிளையாடல்’ திரைப்படம் 61 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 27ஆம் தேதி மறுவெளியீடாகிறது

Share

நடிகர் சிவாஜி கணேசன் நடித்த `திருவிளையாடல்’ திரைப்படம் 61 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 27ஆம் தேதி மறு வெளியீடாகிறது.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படம் ‘திருவிளையாடல்’. ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த 1965-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவபெருமானின் திருவிளையாடல்களை மையமாகக் கொண்டு உருவான இப்படம், தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க புராணத் திரைப்படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இப்படத்தில் சிவாஜி கணேசன் சிவபெருமானாகவும், சாவித்திரி பார்வதியாகவும் நடித்திருந்தனர். மேலும், நாகேஷ், டி.எஸ். பாலையா, கே.பி. சுந்தராம்பாள், முத்துராமன், டி.ஆர். மகாலிங்கம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பரஞ்சோதி முனிவர் இயற்றிய ‘திருவிளையாடல் புராணத்தை’ அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. கே.வி. மகாதேவன் இசையமைத்த பாடல்கள் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக அமைந்தன. குறிப்பாக, நாகேஷ் நடித்த தருமி கதாபாத்திரமும், அதில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளும் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. வெளியான காலகட்டத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘திருவிளையாடல்’ திரைப்படம், தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகூட்டப்பட்டு மீண்டும் திரைக்கு வரவுள்ளது. அதன்படி, 61 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் 27-ந்தேதி இப்படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.