LOADING

Type to search

இந்திய அரசியல்

முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. விசாரணைக்கு ஆஜரானார்

Share

முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் விசாரணைக்காக சென்னை துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். 

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்து தி.மு.க. – த.வெ.க. இடையே பல்வேறு குற்றச்சாட்டுகளும், அனல் பறக்கும் மோதலும் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் தி.மு.க. நிர்வாகி ஒருவரின் திருமண விழா ஒன்றில் பேசிய திருவையாறு தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன், முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் மரியாதைக்குறைவாக பேசியதுடன், ஆபாச வார்த்தைகளாலும் திட்டினார். மேலும் அமைச்சர் கீர்த்தனாவை தரக்குறைவாக ஒருமையில் பேசியதுடன், மிகவும் மரியாதைக்குறைவாகவே பேசினார். இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.வினர் வலியுறுத்தினர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறாக பேசியதாக திருவையாறு தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் மீது கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என துரை சந்திரசேகருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி திருவையாறு தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் விசாரணைக்காக சென்னை துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்போது ஆஜராகி உள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.