தொழில் நுட்பத்தில் பிரமிக்க வைக்கும் “ராமாயணா” திரைப்படம்
Share
தொழில் நுட்பத்தில் பிரமிக்க வைக்கும் “ராமாயணா” திரைப்படம். நமீத் மல்ஹோத்ரா, யாஷ் ஆகியோரின் தயாரிப்பில், நிவேஷ் திவாரி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “ராமாயணா”. படத்தின் ஆரம்பத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடக்கிறது. முதல் போரில் அசுரர்கள் வென்று விடுகிறார்கள். அதன் பிறகு இந்திரன் தலைமையில் போர் நடக்கிறது. இப்போரில் தேவர்கள் வென்று விடுகிறார்கள். தோல்வியுற்ற ராவணன் பிரம்மதேவனை நோக்கி கடும்தவம் இருக்கிறார். இத்தவத்தின் பலனாக தேவர்களால் தனக்கு மரணம் ஏறபடக்கூடாது என்ற வரத்தை பெறுகிறார். அதனால் விஷ்ணு மனிதராக ராமர் அவதாரம் எடுத்து ராவணனை வதம் செய்கிறார். இதுதான் அனைவரும் அறிந்த இராமாயணக்கதையாகும். ஆனால் இப்படத்தை எந்த கோணத்தில் படமாக்கியிருக்கிறார்கள் என்பதுதான் விசித்திரமானதாகும். தொழில்நுட்பத்தின் உச்சத்தை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் நிவேஷ் திவாரி. அயோத்தி நகரமும் வனத்தின் வனப்பும் மிக அழகாக இருக்கிறது.நீர்வீழ்ச்சி அருவிகளில் படம் பார்ப்பவர்கள் குளிப்பதாகவே உணர்கிறார்கள். அவ்வளவு தத்ரூபமாக தொழில் நுட்பத்தில் விளையாடியிருக்கிறார்கள். ராவணனாக நடித்திருக்கும் யாஷ், தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்து நடித்துள்ளார். நவீன தொழில் நுட்பத்தில் படத்தை உருவாக்கியிருப்பதால் படம் பார்க்கும் மூனேகால் மணிநேரம் போனதே தெரியவில்லை. முப்பரிணாமத்தில் படத்தை பார்க்கும் போது நம் கண்முன்னே நடப்பதுபோல் தோன்றுகிறது. ராமனாக நடித்திருக்கும் ரன்பீர் கபூர் இராமனின் வேடத்துக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறார். சீதையாக நடித்திருக்கும் சாய் பல்லவி மிகவும் அடக்கமாகவும் புன்சிரிப்புடனும் நடித்திருப்பது வரவேற்கத்தக்கது. இராமாயணத்தில் சொல்ப்படாத ஒன்று இப்படத்தில் சொல்லப்பட்டிருப்பது விநோதம்தான். அதாவது எந்த இராமாணத்திலும் சீதை சண்டையிடுவதாக இல்லை. ஆனால் இப்படத்தில் சீதையாக நடித்திருக்கும் சாய் பல்லவி வாள் ஏந்தி சண்டை செய்கிறார். ஒருவேளை ஆடல் கலையில் சாய் பல்லவி தேர்ச்சி பெற்றவர் என்பதால், அந்த ஆடல் சாயாலாகவே வாள் பிடித்து ஒரு சண்டைக்காட்சியை புகுத்திருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. சாய் பல்லவி சீதைக்கேற்ற தேர்வு. மிக அருமையாக நடித்திருக்கிறார். இராவணன் தங்கை சூர்ப்பனகையின் கணவரை தங்கையின் கண்முன்னே இராவணன் கொல்வது இப்படத்தின் மூலம்தான் தெரிந்து கொள்ள முடிகிறது. அதன்பிறகு தங்கை சூர்பனகையை பார்த்து இராவணன், “உனக்கு பிடித்தமான வேறு ஒருவனை கணவனாக தேர்ந்தெடுத்துக்கொள்”. என்று கூறுகின்ற கட்டம்தான மனதுக்கு சற்று உறுத்துதலாக இருக்கிறது. மைத்துனனின் துணை இருந்தால் மலையேறியும் பிழைத்துக்கொள்ளாம் என்ற பழமொழிக்கு மாறாக, தங்கையின் கணவனையே கொல்கின்ற திணிப்புக்காட்சி ஏற்புடையாக இல்லை. இராமாயணம் கடல் போன்றது. அந்த கடலில் ஆற்றுநீர்தான் கலக்க வேண்டுமென்தில்லை, எந்த நீரும் கலக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்களோ என்னவோ. சூர்ப்பனகையாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத்சிங் மிக அருமையாக நடித்திருக்கிறார். இப்படத்தில் இராவணன் சீதையை கடத்தி செல்லும்போது ஜடாயு என்ற பறவை இராவணனுடன் சண்டையிடும் காட்சி மிக அற்புதம். இந்த சண்டைக் காட்சியை அதிக நேரம் எடுத்திருந்தாலும் அதை ரசிக்க முடிகிறது. இப்படத்தின் மற்றுமொறு கதாநாயகன் அதிநவீன தொழில் நுட்பம்தான். சீதையை பிரிந்த இராமன் இனி ஹனுமானுடன் சேர்ந்து இராவணவதம் முடிப்பது இராண்டாம் பாகமாக அடுத்த தீபாவளிக்கு வருகிறது.













