LOADING

Type to search

உலக அரசியல்

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்

Share

காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையை குறிவைத்து அதிகாலை இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.