LOADING

Type to search

உலக அரசியல்

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றக் கூடாதென இங்கிலாந்து எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Share

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றக் கூடாதென இங்கிலாந்து எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந்தேதி ஷேக் ஹசீனா(வயது 79) பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அவரது பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், லண்டனைச் சேர்ந்த மேட்ரிக்ஸ் சேம்பர்ஸ் சட்ட நிறுவனத்தின் மூலம் டெல்லியில் உள்ள வங்காளதேச தூதரகத்துக்கு ஷேக் ஹசீனா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தனது வங்காளதேச குடியுரிமையின் அடிப்படையில் புதிய பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையை விரைவாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம், போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது. இத்தகைய சூழலில், ஷேக் ஹசீனா நாடு திரும்புவதற்காக முயற்சி மேற்கொண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் நாடு திரும்பி சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள இருப்பதாக ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பினால், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கக் கோரி, இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் எட் மிலிபாண்டிற்கு அந்நாட்டின் 6 எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்கவும், நியாயமான விசாரணை மற்றும் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்யவும் வங்காளதேச அரசிடம் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் பெற வேண்டும் என இங்கிலாந்து எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.