LOADING

Type to search

சினிமா

கனடா இந்திய திரைப்பட விழாவில் “பத்தா” படம் விருதுக்கு தேர்வானது

Share

கனடாவில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா ஆல்பெர்டாவில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ படத்திற்கும் அதில் நடித்த சிறுவன் சாய் பிருத்விராஜுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி – இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவான ‘பத்தா’ திரைப்படம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இதற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தப் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனம், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18’ மற்றும் ‘சினி1 ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. ரவுடியாக வலம் வரும் கதாநாயகன் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அந்தச் சிக்கலுக்குக் காரணமானவர் யார் என்பதையும், அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதையும் மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சுவாரசியமான கதைக்களத்துடன் உருவான இப்படம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இப்படம் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. ‘பத்தா’ திரைப்படம் கடந்த அக்டோபர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்த சிறுவன் சாய் பிருத்விராஜுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், இந்திய திரைப்பட விழா ஆல்பெர்டாவில் பங்கேற்ற இந்தப் படத்துக்கு சிறந்த படம் என்ற விருது கிடைத்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் ரசிகர்களின் மிகுதியான வரவேற்பைப் பெற்ற சிறுவன் சாய் பிருத்விராஜுக்கு சிறந்த நடிகருக்கான (ஸ்பெஷன் மெசன்) விருதுக்கும் தேர்வாகியுள்ளார்.