அமெரிக்காவின் 17-வது டிரோன் தாக்கி அழிக்கப்பட்டதென ஈரான் தெரிவித்துள்ளது
Share
அமெரிக்காவின் எம்.கியூ.-1 ரக 17-வது டிரோன் வழியிலேயே மறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டதென ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய குடும்பத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது. பல மாதங்களாக இந்த மோதல் நீடித்து வந்த நிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது. எனினும், அவ்வப்போது ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதனை ஈரானும் தடுத்து வருகிறது. இந்த நிலையில், ஈரானுக்கு உட்பட்ட காஷிம் தீவின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் பறந்து வந்த அமெரிக்காவின் எம்.கியூ.-1 ரக 17-வது டிரோன், வழியிலேயே மறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது என்று ஈரான் தெரிவித்து உள்ளது.
புதிய நவீன வான்வெளி பாதுகாப்பு சாதனம் உதவியுடன் அந்த டிரோன் தாக்கப்பட்டு உள்ளது.













