LOADING

Type to search

கனடா அரசியல்

கம்போடியாவின் வரலாற்றுச்சிறப்பு மிக்க சியாம் ரீப் நகரில் அரசின் அனுசரணையுடன் நடைபெற்ற ‘உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு’

Share

கனடாவிலிருந்தும் கலந்துகொண்ட கலை இலக்கிய ஊடகச் செயற்பாட்டாளர்கள்

கம்போடியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சியாம் ரீப் (Siem Reap) நகரில், 2026 நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ‘3-வது உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு’ மிகச் சிறப்பாக நடைபெற்றது. சியாம் ரீப் மாகாண கலாச்சார மற்றும் நுண்கலைத் துறை, அங்கோர் தமிழ்ச் சங்கம், கம்போடியா – தமிழ்நாடு அறக்கட்டளைச் சங்கம், போன்ற பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் இந்த 3-வது உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கம்போடியா வாழ் ஶ்ரீநிவாச ராவ்அவர்கள்( தலைவர்-கம்போடியா தமிழ்ச் சங்சம்) ஆர். குணசேகரன் ( துணைத் தலைவர்-கம்போடியா தமிழ்ச் சங்கம்) திருமதி தாமரை ஶ்ரீநிவாச ராவ் (செயலாளர்-கம்போடியா தமிழ்ச் சங்கம்) ஆகியோர் கூட்டாக இந்த மாநாட்டை நடத்த கம்போடியாவிலிருந்து செயற்பட்டார்கள் என்றால் மிகையாகாது. அவர்களோடு தமிழ்நாட்டிலிருந்து கருணாமூர்த்தி அவர்களும் இணைப்பாளராகச் செயற்பட்டார்.

தமிழ் மொழியின் தொன்மையையும், கவிதை இலக்கிய வளத்தையும், குறிப்பாக உலகத் தமிழ்கவிஞர்களின்பெருமையையும் புலமையையும் பன்னாட்டு அரங்கில் பறைசாற்றும் நோக்கில் இந்த மாநாடு நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கவிஞர்கள் மாநாட்டில் கனடாவிலிருந்து நன்கு அறிமுகமான கவிஞரும் எழுத்தாளரும், உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஊடக ஆளுமையுமான ஆர்.என். லோகேந்திரலிங்கம் மற்றும அதேபோன்று இலக்கிய உலகில் தனித்த அடையாளம் கொண்ட வீணை மைந்தன் சண்முகராஜா அவர்களும் மேலும், தேசம் மாதப் பத்திரிகையின் வெளியீட்டாளரும் ரூபம் மீடியா குழுமத்தின் தலைமை நிர்வாகியுமான ராம்சங்கர் சிவநாதன் அவர்கள், கலந்து கொண்டனர். இந்த மூவரின் பிரசன்னம் மற்றும் பங்களிப்பு பற்றி கவிஞர்கள் மாநாட்டில் பாராட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாநாட்ல் இரண்டு நாட்களும் கம்;போடிய அரசின் கலாச்சாரத் திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் இரண்டு நாட்களும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளைகளையும் வழங்கினர்.

இம் மாநாட்டில் உலகின் பல நாடுகளிலுமிருந்து கலந்துகொண்டவர்களில் கல்வியாளரம் தமிழ் மொழி ஆராய்ச்சியாளருமான எஸ். குமணராஜா, கல்வியாளரும் பன்முக ஆளுமை கொண்டவரம் தமிழ்க் கவிதை மீது அதீத ஆரவம் கொண்டவருமான பொன்குமார் அவர்கள், கருணாமூர்த்தி அவர்கள், பிரான்சிலிருந்து கலந்து கொண்டஜெயபாலகிருஸ்ணன் அவர்கள்; உலகப் பயணக் கட்டுரை வித்தகர் அருணகிரி அவர்கள், ‘பாசிட்டிவ் பெருமாள் அவர்கள், இரத்தினபால் அவர்கள், கவிஞரும் ஆசிரியையுமான தேவி சிவசக்தி அவர்கள், புதுடெல்லி கருண் அவர்கள் மற்றும் . கவிஞரும் ஆசிரியையுமான குரு ஜெயந்தி அவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

இரண்டு நாள் மாநாட்டையும் செயலாளர் தாமரை ஶ்ரீனிவாசராவ் அவர்கள் சிறப்பாக ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கினார்.

முதல்நாளன்று கம்போடிய நாட்டு கலாச்சார நடனங்கள் மற்றும் மயில் நடனங்கள் மற்றும் பரத நாட்டியம் ஆகியனவும் தமிழ்த் தாய் வாழ்த்து கம்போடிய தேசிய கீதம் இசைத்தல் ஆகியன இடம்பெற்றன.

கவியரங்கம்- உரைகள்- கவிதை நூல்கள் வெளியீடு மற்றும் தொழில் முனைவோர் அததுடன் கலைஇலக்கிய வாதிகளின் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட தன்னம்பிக்கை மற்றும் ஊக்குவித்தல் உரைகள் இடம்பெற்றன.

கல்வியாளரம் தமிழ் மொழி ஆராய்ச்சியாளருமான எஸ். குமணராஜா, கல்வியாளரும் பன்முக ஆளுமை கொண்டவரம் தமிழ்க் கவிதை மீது அதீத ஆரவம் கொண்டவருமான பொன்குமார் அவர்கள், கருணாமூர்த்தி அவர்கள், மற்றும் கவிஞரும் எழுத்தாளரும், உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஊடக ஆளுமையுமான ஆர்.என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் நூல்கள்வெளியிடும் அரங்கின் சிறப்பு சிறப்பு விருந்தினர்களாக மேடையை அலங்கரித்து உரையாற்றினர்.
அங்கு கலந்து கொண்ட அனைவருக்கும் தங்கள் படைப்புக்களை சமர்ப்பணம் செய்தல் அல்லது அறிமுகம் செய்தல் ஆகியவற்றுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பெற்றன.