யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனம்
Share
பெண்களுக்கான ‘உயரத் தகுதி’ தொடர்பில் சர்ச்சை அங்கு சர்ச்சைகள்; பலவற்றை தோற்றுவித்துளளது!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பாதுகாப்பு பரிசோதகர் (Security Guard / Security Inspector) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பில் பெண்களுக்கான உயரத் தகுதி தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
குறித்த பதவிகளுக்கான உடற்தகுதிப் பரீட்சை கடந்த 2026.10.28 அன்று நடைபெற்றது. இதன்போது ஆண், பெண் விண்ணப்பதாரர்களுக்கு உயரத் தகுதி ஒரே அளவில் நிர்ணயிக்கப்பட்டமை தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பெண்களுக்கான குறைந்தபட்ச உயரத் தகுதி 5 அடி 2 அங்குலமாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஏனைய தகுதிகள் மற்றும் ஆட்சேர்ப்பு அறிவித்தலின் நிபந்தனைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும், தகுதியிருந்தும் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் வழங்கும் வகையில், உடற்தகுதிப் பரீட்சையை மீண்டும் நடத்தி, தகுதியானவர்களுக்கு உரிய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.













