LOADING

Type to search

இந்திய அரசியல்

மதுராந்தகம், தாராபுரம் தவெக எம்.எல்.ஏ.க்களின் வெற்றியை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யபட்டுள்ளன

Share

 மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் தவெக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமாரவேல், சத்தியபாமா ஆகியோரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமாரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் வெற்றி பெற்றனர். பின்னர் இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து காலியான இந்த இரு தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து அக்டோபர் 9-ந்தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமாரவேல், சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பானுமதியும், மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் எஸ்.உமாபதியும் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த தேர்தல் வழக்குகளுக்கான எண்ணிடும் நடைமுறைகள் முடிவடைந்த பிறகு, இரு வழக்குகளும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.