LOADING

Type to search

கனடா அரசியல்

Mississauga Mayor His Worship Alvin Tedjo pays tribute to Tamil National heroes, at ‘Maa Veerar Week-2026’ hosted by ‘Behind Me’Media

Share

மிசிசாகாவில் ‘பிகைன்ட் மீ’ ஊடக நிறுவனம் நடத்திய ‘மாவீரர் வாரம்-2026’ ஆரம்ப நினைவேந்தலில் அஞ்சலி செலுத்தி நகரின் மேயர் Alvin Tedjo அவர்கள்!

கடந்த 21ம் திகதி சனிக்கிழமை மிசிசாகாவில் தமது தலைமை அலுவலகத்தில் பல்மொழி ஊடகமான ‘பிகைன்ட் மீ’ ஊடக நிறுவனம் நடத்திய ‘மாவீரர் வாரம்-2026’ ஆரம்ப நினைவேந்தலில் அழைக்கப்பெற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் உணர்வாளர்கள். ஊடகவியலாளர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அன்றைய தினம் ‘பிகைன்ட் மீ’ ஊடக நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த மேற்படி ‘மாவீரர் வாரம்-2026′ ஆரம்ப நினைவேந்தலுக்காக மண்டபம் மாவீரர்களின் படங்களால் அழகுறவும் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தப்பட்டன. மதியம் தொடக்கம் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலர் தொடர்ச்சியாக தங்கள் குடும்பத்தினரும் வந்து மாவீர்களின் தியாகங்களுக்கு தங்கள் மரியாதையை செலுத்தினார்கள்

அங்கு சமூகமளித்த அரசியல் தலைவர்களோடு இணைந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற மிசிசாகா நகரின் மேயர் Alvin Tedjo அவர்களும் தீபச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
27ம்’ திகதி வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் இறுதிநாள் நிகழ்வுகளில் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் பெறுகின்றது.