வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் வீசிய சுழல்காற்றினால் வீடுகள் முழுமையாக சேதம்
Share
பு.கஜிந்தன்
கடந்த 26ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சுழல் காற்று வீசியதால் அங்கு சேதம் ஏற்பட்டதுடன் மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் – வடமராட்சிக் கிழக்கு, ஆழியவளை அருணோதயா விளையாட்டுக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள தையல் நிலையம் ஒன்று இரண்டு வீடுகள் என்பன இன்று பிற்பகல் திடீரென வீசிய சுழல் காற்றினால் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.
மழையுடன் கூடிய காலநிலை நிலவிவரும் நிலையில் 26ம் திகதி அ ன்று பிற்பகல் 4 மணியளவில் திடீரென ஏற்பட்ட குறித்த மினி சூறாவளி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













