ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு மில்லியன் மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்ற நிலையில், நாட்டின் வடக்கில் தமிழர்களின் காணியை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்வதாகவும், மலையகத் தமிழர்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் ஜனாதிபதி ...
இலங்கையின் நாடாளுமன்றம் உயர் நீதிமன்றத்தின் பரிந்தரைககைளை புறந்தள்ளி, இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. மிகவும் சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்புச் சட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி தனிப்பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் ...
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல், உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் இன்று (20.02.2024) இடம்பெற்றது. வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் மற்றும் ...