(மன்னார் நிருபர்) (30-01-2024) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கடற்கரையில் தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய இழுவை படகையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எருக்கலம்பிட்டி மற்றும் உப்புக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் ...
பாடசாலைகளில் படையினர் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு மாணவர்களிடையே என்றுமில்லாதவாறு போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்திருக்கிறது. போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்புகின்ற இராணுவப்பாணி நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகுவதைத் தடுக்கமுடியாது. மாணவர்களிடையே போதைப்பழக்கம் ஏற்படுவதைத் தடுப்பதில் படைத்தரப்புஇ ஆசிரியர்கள் எல்லோரையும் விடப் ...
கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. புதிதாக கரைச்சி பிரதேச செயலாளராக பொறுப்பேற்ற பிரதேச செயலாளர் T முகுந்தன் அமைச்சரை வரவேற்றார். தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் கூட்டம் ஆரம்பமானது. குறித்த கூட்டத்தின் தலைமை உரையை அமைச்சர் ...