மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த நைஜீரிய ஜனாதிபதி போலா தினுபு தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலால், 35 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ...
காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் இதுவரை சுமார் 62 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து தவிக்கின்றனர். எனவே பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. ஆனால் போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் ...
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக ...