பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் பிட்டியம்பதி சங்கரத்தை வீரபத்திரர் சமேத பத்திரகாளி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றம் 14-03-2024 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் வீரபத்திரர் சமேத பத்திரகாளிக்கு விஷேட ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரர் சமேத பத்திரகாளிக்கு விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்று ...
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான கூட்டுறவு அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி லின்டா எரிக், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். கௌரவ ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் 14.03.2024 அன்று இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உள்ளூர் மற்றும் ...
சண்முகநாதன் பார்த்திபன் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் வடக்கின் மன்னார் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான காபன் பரிசோதனைகள் மேலும் தாமதமாகுமென இந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சடடத்தரணிகள் தெரிவிக்கின்றனர். மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாக மனித ...