LOADING

Type to search

இந்திய அரசியல்

ராகுல்காந்தி போராட்டங்களை ஒருங்கிணைக்க இணையதளம் தொடங்கினார்

Share

ராகுல்காந்தி போராட்டங்களை ஒருங்கிணைக்க இணையதளம் தொடங்கினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ‘சத்யாகிரஹா’ என்ற இணையதளத்தை தொடங்கினார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உண்மை நசுக்கப்படுவது உங்களுக்கே தெரியும். நாடு முழுவதும் எண்ணற்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்கள்,மாணவர்கள், ஜென்-சி தலைமுறையினர், விவசாயிகள் உள்ளிட்டோர் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். அந்த போராட்டங்களை ஒருங்கிணைக்க ‘சத்யாகிரஹா’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் போராட்டத்தை பதிவு செய்யுங்கள். உங்களுக்கு எந்தவகையில் உதவலாம் என்று நாங்கள் பார்க்கிறோம். எங்கெல்லாம் உண்மை நசுக்கப்படுகிறதோ, அங்கு மக்களுக்கு உதவுவது என் கடமை. நாடாளு மன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உங்களுக்கு துணைநிற்பேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.