கொடி காத்த குமரனின் வீரமும், தியாகமும் என்றும் நிலைத்திருக்குமென அண்ணாமலை கூறியுள்ளார்
Share
கொடி காத்த குமரனின் வீரமும், தியாகமும் என்றும் நிலைத்திருக்குமென அண்ணாமலை கூறியுள்ளார். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு பலர் உயிர் தியாகம் செய்தனர். அவர்களின் தியாகம் மற்றும் போராட்டத்தின் காரணமாக தான் நாம் தற்போது சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம். இப்படிப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்தவர் கொடி காத்த குமரன்
ஆவார். அவரின் 122-வது பிறந்தநாள் விழா இன்று (ஞாயிறு கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் குமரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தேசியக் கொடியைத் காக்க தன் இன்னுயிரையே தியாகம் செய்த மாவீரர், திருப்பூர் கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்த தினம் இன்று. தாய்நாட்டின் விடுதலைக்காக இளம் வயதிலேயே துணிந்து போராடி, உயிர்த் தியாகம் செய்த அமரர் திருப்பூர் குமரன் அவர்களின் வீரமும், தியாகமும் என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















