பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பலூசிஸ்தானில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதியின் அருகேதான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ...
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை வழங்கினார். அதேபோல, 500 கிராமியக் கலைஞர்களுக்கு ...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கார் மீது பேருந்து மோதிய கோர விபத்தில் இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பொதுமக்கள் ஒன்று கூடி பேருந்தை விலக்கி காரை தனியாக எடுத்தனர். இன்னும் மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.