LOADING

Type to search

இந்திய அரசியல்

மழை சீரமைப்புப் பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

Share

சென்னையில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயார் என்றும் சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள ரெட்டேரி ஏரியை தூர்வாரி குடிநீர் தேவைக்காக பயன்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் உள்ள வீனஸ் நகர், ரெட்டேரி, பாலாஜி நகர், தணிகாசலம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: சென்னையில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயார். சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை. அரசுக்கு வரும் பாராட்டுகளை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் விமர்சிக்கின்றனர். சமூக வலைதளங்களில் அரசுக்கு பாராட்டு வருகிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.