வெம்பக்கோட்டை அகழாய்வில் ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுப்பு
Share
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கற்கள் நுண் கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் விலங்குகளை வேட்டையாட கருவிகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் இக்கற்கள் தற்போது புழக்கத்தில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.