நடிகர் விஷால் தங்கை கணவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு
Share

நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கும் நகைக்கடை அதிபர் உம்மிடி உதய்குமார்- உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் மகனான உம்மிடி கிரிட்டிஸ்க்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், வங்கிக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், விஷாலின் தங்கை கணவரான உம்மிடி கிரிட்டிஸ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் ரூ.5.5 கோடி கடன் பெற உடந்தையாக இருந்ததாகவும் ரூ.2.5 கோடி பணம் பெற்று மோசடிக்கு உடந்தையாக கிரிட்டிஸ் இருந்துள்ளார். மேலும் மோசடி தொடர்பாக நில உரிமையாளர், கட்டுமான நிறுவனர், வங்கி அதிகாரிகள், கடன் வாங்கியவர்கள் என 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.