LOADING

Type to search

சினிமா

‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

Share

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கர்நாடகாவின் உள்ள பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் வெளியீடு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியாக உள்ளது.