சர்தார் 2 முன்னோட்டம் விரைவில் வெளியீடு?
Share

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சர்தார்.’ இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது. அதன்படி, சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து படக்குழு வெளியிட்ட தகவல்களில் சர்தார் 2 படத்திற்கான பூஜையுடன் தொடங்கியதாக அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து சர்தார் 2 படம் குறித்து அடுத்தடுத்த பதிவேற்றங்கள் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சர்தார் 2 படத்தின் முன்னோட்டம் உருவாகிவிட்டதாகவும், இதற்கு சென்சார் பெறும் பணிகளும் முழுமை பெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி விரைவில் 2.54 நிமிடங்கள் ஓடும் முன்னோட்டம் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளையும், கலை இயக்குநராக ராஜீவன், சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன், படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலுக்குட்டி மேற்கொண்டுள்ளார்.