LOADING

Type to search

இந்திய அரசியல்

இளையராஜாவிற்கு பாராட்டு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Share

இசைஞானி இளையராஜா சிம்போனி இசை நிகழ்ச்சி மற்றும் 50 ஆண்டு கால திரையிசை பயணத்தை பாராட்டும் விதமாக ஜுன் 2-ம் தேதி இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு. 

    தமிழ்நாடு அரசு இளையராஜா சிம்பொனி இசையை இசைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டசபை உறுப்பினர் சிந்தனை செல்வன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நானும் இளையராஜாவை சந்திக்கும் போது இதே கோரிக்கையை முன்வைத்தேன். ஆனால் 400-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பது என்பது தற்போது சாத்தியமில்லை. ஆனால் விரைவில் அதை கண்டிப்பாக செய்வதாக இளையராஜா உறுதி அளித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றியதற்காகவும், இளையராஜாவின் 50 ஆண்டு கால திரையுலக பணிக்காகவும் அவருக்கு பாராட்டு விழா ஜூன் மாதம் 2-ந்தேதி நடத்தப்படும்” என்று அறிவித்தார்.