ராம் சரணின் ‘ஆர்.சி 16’ பட முதல்காட்சி பதிவேற்றம்
Share

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘ஆர்.சி 16’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தநிலையில், தற்போது முடிவடைந்திருக்கிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு டில்லியில் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில், இப்படக்குழு முக்கிய பதிவேற்றம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல்காட்சி பதாகை இன்று காலை வெளியாக உள்ளது.