LOADING

Type to search

சினிமா

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படம் மே 1ம் தேதி வெளியீடு

Share

நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. முன்னதாக முன்னோட்டம், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ரெட்ரோ படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ரெட்ரோ என்பதற்கான அர்த்தத்தை அவர் கூறியுள்ளார். அதாவது, “ரெட்ரோ என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். இதற்கு திரும்பிப் பார்ப்பது என்ற வேறு அர்த்தமும் உண்டு” என்று தெரிவித்துள்ளார்.