LOADING

Type to search

உலக அரசியல்

இந்திய வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது

Share

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய தொழில் அதிபர் மெகுல் சோக்சி பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார். மெகுல் சோக்சிக்கு எதிராக இரண்டு பிடிவாரண்டுளை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்துள்ளது. புற்று நோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து மருத்துவமனைக்கு மெகுல் சோக்சிசெல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அவரை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். எனினும், பெல்ஜியத்தில் உடல் நிலையை காரணம் காட்டி உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.