LOADING

Type to search

இலங்கை அரசியல்

இந்தியாவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மன்னர்கள் பயன்படுத்திய நெல்லின அறுவடை விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது!

Share

இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவணி என்ற நெல்லும், மாப்பிள்ளை சம்பா என்ற நெல்லும், கரு இழை என்ற நெல்லும் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு 23ம் திகதி திங்கட்கிழமை அன்று பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நெல்லினங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இவ்வாறு பயிரிடப்பட்டு அன்றையதினம் அறுவடை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வயலில் பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் பாரம்பரிய முறைப்படி உழப்பட்டு சிறுதானிய பயிரான பயறு விதைக்கப்பட்டது.

பின்னர் அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பெற்றது. . அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள. இந்திய துணை தூதரகத்தால் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள. இந்திய துணை தூதுவர் சாய்முரளி, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கொஸ்தா மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேற்குறித்த நெல்லினங்கள் முதல் தடவையாக இலங்கையில் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.