LOADING

Type to search

இலங்கை அரசியல்

காரைநகர் கோவளம் வெளிச்சவீடு புனரமைக்கப்படுவதற்கு தொல்லியல் திணைக்களம் முட்டுக்கட்டையாம்!

Share

பு.கஜிந்தன்

காரைநகர் – கோவளம் வெளிச்சவீடு புனரமைப்பு பணிகள் முன்னெடுகாகப்படாமை தொடர்பாக 26ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசப்பட்டது.

குறித்த வெளிச்சவீடானது தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்குள் காணப்படுகின்றதால், அது ஏன் இன்னமும் புனரமைப்பு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகத்தர், புனரமைப்புக்கு தேவையான நிதி இல்லாததாக கூறினார்.

இதன்போது ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா எம்.பி கருத்து தெரிவிக்கையில்,

வெளிநாட்டில் இருக்கின்ற ஒருவர் தான் புனரமைப்பதற்கு தயாராக இருப்பதாக தொல்லியல் திணைக்களமாகிய உங்களிடம் கூறியதாகவும், தாங்கள் அந்த நிதியை உங்களிடம் தருமாறு கூறியதாகவும் அவர் கூறினார். மேலும், அதனை திருத்தம் செய்து தந்தால் நீங்கள் அதனை பராமரிப்பீர்களா என கேட்டார் என்றார்.

இது குறித்து சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

கோவளம் வெளிச்ச வீட்டினை புனரமைப்பதற்கு கடந்த ஆறு வருடங்களாக நாங்கள் கேட்கிறோம். அதனை புனரமைக்க தேவையான ஒரு கோடி 25 இலட்சம் ரூபா நிதியை தருவதாக புலம்பெயர் தேசத்தில் உள்ள ஒருவர் கேட்கிறார். நான் மூன்று தடவைகள் நேரில் சென்று கேட்கும்போது காசை தங்களிடம் தருமாறும், எங்களை அபிவிருத்தி பணிகளுக்கு வரவேண்டாம் என்றும் கூறுகிறார்கள் என்றார்.

இதற்கு ஸ்ரீ பவானந்தராஜா எம்.பி, குறித்த விடயம் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் பேசப்பட்டதாகவும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இதுகுறித்து பேசப்படவுள்ளதால் உங்களது அதிகாரிக்கு தெரியப்படுத்துங்கள் என தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தருக்கு தெரிவித்துள்ளார்.