LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பு – தாந்தாமலை முருகன் ஆலய வரலாற்றை சிலர் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர் என்கிறார் கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர்

Share

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அதன் வரலாற்றையும் தமிழர்களுடைய தொன்மையான பூர்வீக இடங்களையும் போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் திரிவுபடுத்தி; பொய்யான பிழையான கருத்துக்கள் வழங்கி தமிழர்களின் வரலாற்றை சீர்குவைத்து வருகின்றனர் என கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர் கிரேஸ் குமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

கடந்த வாரம் ஜெர்மனி தூதுவரை போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் மதிமேனன் குறித்த ஆலயத்துக்கு அழைத்து சென்று ஆலயம் 300 வருட வரலாற்றைக் கொண்டது என பொய்யான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர் புதன்கிழமை (30) )ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவில் வரலாறு அதனுடைய கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பாக பிரதேசத்தில் இருக்கும் ஒரு சில தமிழரசு கட்சி செயற்பாட்டாளர்களால் செயல்பாடு நடைபெற்றது. அதை நாங்கள் சென்று பார்வையிட்டு நாங்கள் அவர்களுடைய கருத்துக்கள் பொய்யான பிழையான திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்கள் என்று உரைத்தோம்.
கி.பி 301, மூவாயிரத்து 700 வருடங்கள் வரலாற்றை கொண்ட இந்த ஆலயம். இருந்தபோதும் பழமைவாய்ந்த பிரதேசங்கள் தொல்பொருள் அறிவிக்க முடியும் என்கிற வரலாறு அவர்களுக்கு தெரியாது ஆகவே இப்படியான ஒரு குழப்பமான நிலையை உருவாக்க உங்களுடைய பிரதேசத்தின் வளர்ச்சியும் எமது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை சீர்குலைக்கின்ற செயல்பாடு அமைந்திருந்தது.

உண்மையாகவே இந்த ஆலயம் மற்றும் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பணிசெய்ய வேண்டுமாக இருந்தால் ஆலயத்தின் நிருவாக சபையினரை அழைத்து அவர்கள் ஊடாக கலந்தாலோசித்து அதற்கான ஒரு திட்டவரைவு அந்த உயர் ஸ்தாணிகரிடம் கையளித்திருக்க வேண்டும். ஆனால் எந்த விதமான ஒரு திட்டவரைவே திட்டமிடல்களும் இல்லாது ஒரு அரசியலுக்காக அந்த இடத்தை பயன்படுத்தி இருந்தார்கள்

எங்களுடைய பிரதேசத்தில் வெளிநாட்டு தூதுவர்களை அழைத்துவந்து எமது தமிழர்களுடைய பூர்வீக இடங்களையும் பூர்வீக வரலாற்று களையும் திரிவுபடுத்தி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் உட்பட்டது தான் என ஒரு கருத்தை முன்வைத்து தமிழர்களுடைய வரலாற்றை தமிழரசு கட்சி சீரழிக்கும் ஒரு கருத்தாக பார்க்கிறேன்

தமிழர்களின் வரலாற்று தொன்மையான பிரதேசங்களை பூர்வீகம் இல்லாத பிரதேசங்களாக காட்டுகின்ற வரலாற்றை மூடிமறைக்கும் செயற்பாடாக பார்க்கிறேன் என்றார்.