Point. Pedro: Viyaparimoolai Nellandai Association hosted it’s 27th Annual Summer Get Together at Milliken Park.
Share
கனடா- வியாபாரிமூலை நெல்லாண்டை மக்கள் அமைப்பு தனது 27-வது ஆண்டு கோடைக்கால ஒன்றுகூடல் நிகழ்வை, மில்லிகன் பூங்காவில் நடத்தியது.
கனடாவில் வசிக்கும் பருத்தித்துறை பிரதேசத்தின் வியாபாரிமூலை நெல்லாண்டை மக்கள், கோடை மற்றும் குளிர்காலங்களில் ஒன்றுகூடி தங்கள் நட்பையும் உறவையும் வலுப்படுத்தவும் தாயகத்தில் உள்ள மக்களுக்கு உதவிகள் வழங்கும் நோக்கத்திற்காகவும் 1999-ஆம் ஆண்டில் ‘வியாபாரிமூலை நெல்லாண்டை சங்கம்’ நிறுவப்பட்டது. இதன் நிறுவன உறுப்பினர்களாக ஆர். சுந்தரலிங்கம், காலஞ்சென்ற எஸ். பூரணச்சந்திரன், என். பாலச்சந்திரன், எம். ஆனந்தகிருஷ்ணன் மற்றும் சிலர் திகழ்கின்றனர். இச்சங்கத்தின் 27-வது வருடாந்த கோடைக்கால ஒன்றுகூடல் நிகழ்வு, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி சனிக்கிழமையன்று மில்லிகன் பூங்காவில் (Milliken Park) உள்ள ‘ஷெல்டர் #1’-இல் (Shelter #1) நடைபெற்றது.
அன்றைய தினம் உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனைவரும் அங்கு கலந்து கொண்டு ஒன்றாக பல மணி நேரத்தைக் கழித்தும் உணவருந்தியும் பின்னர் விளையாட்டு மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் ஆகியவற்றில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டனர். அன்றைய தினம் தனது நண்பரான ஆர். , ‘ உதயன்’ (Canada Uthayan) பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் திரு.லோகேந்திரலிங்கத்தை தலைவர் திரு சுந்தரலிங்கம் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் அழைத்ததன் மூலம் அவர் அங்கு கலந்து கொண்டு சங்க உறுப்பினர்களோடு மகிழ்ச்சியுடன் உரையாடிச் சென்றார். அங்கு இடம் பெற்ற கரப்பந்தாட்டம் அனைவரையும் கவர்ந்தது என்றால் அது மிகையாகாது.


















