LOADING

Type to search

உலக அரசியல்

சிங்கப்பூரில் பேருந்து பயணிகளுக்கு இடையூறு செய்தால் ரூ.3.7 லட்சம் அபராதம் விதிக்கப்படும்

Share

 சிங்கப்பூரில் பேருந்து பயணிகளுக்கு இடையூறு செய்தால் ரூ.3.74 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சிங்கப்பூர் நாடு தூய்மையை கடைப்பிடிப்பதிலும், பராமரிப்பதிலும் முன்னணி நாடாக உள்ளது. அதனை பொதுமக்களும் முறையாக கடைப்பிடித்து அரசுக்கு உதவியாக இருந்து வருகின்றனர். இவற்றை மீறும் நபர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனை உள்ளிட்டவை விதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், பேருந்து பயணிகளுக்கு இடையூறு செய்தால் அதிகபட்சம் ரூ.3.74 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த விதிகளின்படி, பேருந்து இருக்கைகள் மீது கால்களை வைப்பது, சத்தமாக ஆடியோவை ஒலிக்க செய்து கேட்பது, பேருந்துக்குள் உண்பது, மது அருந்துவது அல்லது குப்பை கொட்டுவது போன்ற செயல்களுக்காக பேருந்து பயணிகள் 500 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.37,457) வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசு பேருந்தின் எந்த பகுதியிலாவது அழுக்கு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.3.74 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.