LOADING

Type to search

கனடா அரசியல்

ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவின் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்துகொண்ட தமிழ்த் திரை இசையமைப்பாளரும் இயக்குனருமாகிய மிஸ்கின் !

Share

7வது ஆண்டில் காலடி எடுத்துவைத்த ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவின் 2026ம் ஆண்டிற்குரிய அங்குரார்ப்பண வைபவம் கடந்த 22-09-2026 அன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ரொறன்ரோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவின் நிறுவனர் செந்தூரன் நடராஜா மற்றும் இயக்குனர் கிருத்திகா ஆகியோரின் மேற்பார்வையில் பல நண்பர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களின் ஆதரவோடு கடந்த வருடங்களைப் போல இவ்வருடமும் கோலாகலமாக நடைபெற்றது என்றால் அது மிகையாகாது.

மேற்படி சிறப்பு வைபவத்தில் கலந்து சிறப்பித்த தமிழ்த் திரையுலகின் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் மிஸ்கின் அவர்கள் ஆற்றிய உரை அறிவு சார்ந்த ஒன்றாகவும் ஈழத் தமிழர்கள் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறை மற்றும் பாசம் அத்துடன் எமது மக்களின் திரைப்படத்துறை மீதான கவனம் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கும் ஆதரவு போன்ற விடயங்களை தழுவியதாக அமைந்தது. எமது மக்களின் வலிகளை நன்கு புரிந்து கொண்ட ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனராகவும் கலைஞராகவும் அவர் அன்றைய தினம் கலந்து கொண்டமை கனடா வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு ‘கொண்டாட்டம்’ போல அமைந்ததாக அங்கு வாழ்த்துரை வழங்கிய ‘உதயன்’ பிரதம ஆசிரியர் குறிப்பிட்டமை மிகவும் பொருத்தமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

மேற்படி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மார்க்கம் நகர மேயர் பிராங்க் ஸ்கெப்பட்டி மற்றும் கனடிய தமிழ்த் திரைப்பட இயக்குனர் லெனின் சிவம் ஆகியோரின் வாழ்த்துரைகள் பயனுள்ள தகவல்களை நிறுவனர் செந்தூரன் நடராஜாவிற்கு வழங்கியவையாக அமைந்தன என்றும் கலைஞர் பலர் கருத்துத் தெரிவித்தனர்.