LOADING

Type to search

கனடா அரசியல்

Awards Ceremony & Launching of their Own Cricket Field hosted by ‘Tamil Canadian Cricket Association was a Proud Occasion!

Share

‘தமிழ்க் கனடிய கிரிக்கெட் கழகம்’ நடத்திய வருடாந்த விருது விழாவும் புதிய கிரிக்கெட் மைதான திறப்புவிழாவும்!

கனடாவில் நீண்ட கால கிரிக்கெட் வரலாற்றையும் வெற்றிகளையும் கொண்ட ‘தமிழ்க் கனடிய கிரிக்கெட் கழகம்’ நடத்திய 2026ம் ஆண்டிற்குரிய வருடாந்த விருது விழாவும் அவர்களது புதிய கிரிக்கெட் மைதான திறப்பு விழாவும் கடந்த 26ம் திகதி சனிக்கிழமையன்று மாலை நடைபெற்றது.
3280 Westnew Road North, Pickering என்னும் விலாசத்தில் அமைந்துள்ள விசாலமான மைதானத்தில் நடைபெற்ற இந்த அற்புதமான வைபவத்தில் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள்- மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் ஏனைய கிரிக்கெட் கழகங்களின் உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட அந்த மைதானம் அழகிய முறையில் அலங்கரிக்கப்பெற்று பார்ப்பவர்கள் உற்சாகமடையும் ஒரு தமிழர் விழாவாக நடைபெற்றது என்றால் அது மிகையாகாது.

மேற்படி கிரிக்கெட் மைதான அமைந்துள்ள நிலமானது பிக்கரிங் நகர சபைக்குச் சொந்தமானது என்பதும் நீண்ட கால குத்தகைக்கு இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் “Tamil Canadian Cricket Association” நடத்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் கழகங்கள் ஆகியவற்றுக்கு கேடயங்களும் வெற்றிச் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன. கழகத்தின் தலைவர் திரு சஞ்சேய் கோணேஸ்வரன் இந்த வைபத்தை தனது அயராத முயற்சியினால் நடத்தியும் சொந்தமாக ஒரு கிரிக்கெட் மைதானத்தைப் நாம் எமக்காகப் பெற்றுக் கொண்டோம் என்னும் பெருமைக்குரியவராக அங்கு எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாது காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

–செய்தியும் படங்களும்’ சத்தியன்