03-10-2026 அன்று சனிக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ இசை நிகழ்ச்சிக்காக தமிழக பாடக பாடகிகள் ரொறன்ரோ வந்துள்ளனர்
Share
ஸ்காபுறோவில் இயங்கிவரும் விஜயா நகை மாளிகையின் பிரதான அனுசரணையிலும் சமூகச் செயற்பாட்டாளர் குரு யோகராஜாவின் ஏற்பாட்டிலும் எதிர்வரும் 03-10-2026 அன்று சனிக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ இனிய இசை நிகழ்ச்சிக்காக எதிர்பார்க்கப்பட்ட தமிழக பாடக பாடகிகளும் வாத்திய இசைக் கலைஞர்களும் ரொறன்ரோ வந்துள்ளனர்.ய அவர்கள் அனைவரையும் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வரவேற்பதற்காக பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பிரதிநிதிகள் என பத்துக்கு மேற்பட்டவர்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

பிரபல பாடகர் முகேஷ்-பாடகர் சந்தோஷ் சுப்பிரமணியம்- பாடகி வர்ஷா மற்றும் வாத்திய இசைக் கலைஞர் பிரபல்யமான மணிகண்டன் ஆகியோர் விமான நிலையத்தில் 30ம் திகதி வரவேற்கப்பெற்றார்கள்.
அன்றைய தினம் மாலை ஸ்காபுறோவில் நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பிலும் மிகுந்த ஆர்வத்துடன் பாடகர் முகேஷ்-பாடகர் சந்தோஷ் சுப்பிரமணியம்- பாடகி வர்ஷா மற்றும் வாத்திய இசைக் கலைஞர் பிரபல்யமான மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரின் கருத்துக்களுக்கு பதிலளித்தார்கள்.

இங்கே காணப்படும் படங்களின் தமிழக மற்றும் கனடிய பாடக பாடகிகள் மற்றும் இசைக் கலைஞர்கள் அத்துடன் விஜயா நகைமாளிகை உரிமையாளர் ரூபன் ஆகியோரும் ஏனைய நண்பர்களும் காணப்படுகின்றார்கள்.
அனுமதிச் சீட்டுகளுக்கு: 416 564 9642 அல்லது 416 566 0790 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்















