LOADING

Type to search

சினிமா

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது

Share

ஜெயராம், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் படங்களை இயக்கியவர் கவுதம் ராஜ். இவரின் அடுத்த படப்பூஜை சென்னையில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெற்றது. வொயிட் கார்பெட் பிலிம்ஸ் மற்றும் ரிடெக்டட் ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. ஆர்யா வழங்கும் இந்த படத்தில் ஜெயராம், சிம்ரன் நடிக்கிறார்கள். ‘பஞ்சதந்திரம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தாலும், அதில் கமல் ஜோடியாக சிம்ரன் வருவார். இந்த படத்தில் ஜெயராம் ஜோடியாக முதன்முறையாக நடிக்கிறார். படம் குறித்து ஜெயராம் பேசுகையில், “ஒரு சந்தோஷமான நேரம் இது. நடிகை சிம்ரன் உடன் பஞ்சதந்திரம் படத்தில் நடித்தேன். அதன் பின் அவருடன் ஜோடியாக தற்போது நடிக்கிறேன். மகிழ்சியாக உள்ளது” என்றார். இந்த நிலையில், ஜெயராம், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.