மன்னாரில் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி விளக்கேற்றி வைப்பு
Share
(மன்னார் நிருபர்) (29-01-2021)

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வு இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன் தலைமையில், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் தரவன் கோட்டை கோட்டை சிறி முத்துமாரியம்மன் ஆலயம், தோட்டவெளி, பறப்பான்கண்டல் ,இசங்கன்குளம் ,ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணியளவில் விளக்கேற்றும் நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது அரசியல் கைதிகளின் உறவுகள் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
























