LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் சீனத்தூதுவர்!

Share

(15-12-2021)

இலங்கைக்கான சீன தூதுவர் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் யாழிற்கு வருகை தந்துள்ள நிலையில், சீன தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் புதன்கிழமை மதியம் பருத்தித்துறை முனைப் பகுதியையும் பார்வையிட்டுள்ளனர்.

சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள், இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை கடந்த சில காலங்களில் வடக்கிலுள்ள மூன்று தீவுகள் சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அதோடு வடக்கின் மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்பட விருந்த மின் திட்டத்தை சீனா கைவிட்டு உள்ள நிலையில் சீன தூதுவர், வடக்குக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது விஜயம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.