கனடியத் தமிழ்ச் சமூகத்தில் மனநலச் சமத்துவத்தை மேம்படுத்தும் அரிய பணியில் இணைந்துள்ள ‘யாழ் மருத்துவ பீடம்’ தந்த வைத்தியப் பெருந்தகைகள்!
Share
கனடியத் தமிழ்ச் சமூக மட்டத்தில் மனநலச் சமத்துவத்தை மேம்படுத்தும் என்னும் அரிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கடந்த சில மாதங்களாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்த ‘கனடா- யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்ற மருத்துவர்களின் சங்க’த்தைச் சேர்ந்த பல மருத்துவர்கள் ஒன்றிணைந்து நடத்திய பயனுள்ள ஊடகக் கருத்தரங்கு கடந்த 31-10-2026 அன்று சனிக்கிழமை ஸ்காபுறோவில் அமைந்துள்ள சென்றனரி பொது வைத்தியசாலையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி திட்டமானது SCARBOROUGH HEALTH NETWORK வைத்திய அமைப்புடன் இணைந்து மெற்கொள்ளப்படவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அரிய திட்டத்தில் இணைந்துள்ள யாழ் மருத்துவ பீடம் தந்த பல வைத்தியப் பெருந்தகைள் சார்பாக அன்றையதினம் கருத்தரங்கை வைத்தியர் மைலாசன் மயில்வாகனம் தொகுத்து வழங்க வைத்தியர் இலம்போதரன் இராமநாதன். வைத்தியர் தமிழ்வாணன் பரமநாதன். வைத்தியர் ஸ்ரீ நவரட்ணம்.
இளஞ்செழியன் அம்பலவாணர், வைத்தியர் செந்தூரன் குணரட்ணம் ஆகியோர் தமிழ் ஊடக நிறுவனங்களின ஊடகவியலாளர்களுக்கு திட்டம் பற்றி விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து SCARBOROUGH HEALTH NETWORK வைத்திய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளான மத்திய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி. ஒன்றாரியோ மாகாணத்தின் இணையமைச்சர்களில் ஒருவரான மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜேய் தணிகாசலம் உட்பட சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் சேவையாளர்கள், வர்த்தகப் பெருமக்கள் என மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மேற்படி பயனுள்ள திட்டம் தொடர்பான பலரின் விளக்கவுரைகளை கேள்வி பதில்கள் ஆகியவற்றை நன்கு கவனித்த வண்ணம் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அங்கு முக்கிய உரையாற்றிய வைத்தியர் திருமதி ஶ்ரீ நவரட்ணம் தனது உரையை உணர்வுபூர்வமாகவும் சபையோரை கவரும் வகையிலும் சான்றுகளுடன் ஆற்றினார். மனநலப் பாதிப்புற்றவர்களை நாம் ஆரம்பத்திலேயே குணப்படுத்தும் அல்லது ஆற்றுப்படுத்தும் சிகிச்சைகளை அல்லது ஆலோசனைகளை வழங்குவது முக்கியமானது என்று குறிப்பிட்டதுடன் மனநலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஒரு தம்பதியை அழைத்து வந்து அவர்களது மகன் ஒருவர் எவ்வாறு தாமதான சிகிச்சைக்கு அவர் உள்வாங்கப்பட்டதனால் எவ்வாறு அவர் உயிர் துறக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அந்தக் குடும்பம் தள்ளப்பட்டது என்பது மிகுந்து பொறுப்புணர்வு எடுத்துரைத்தார்.
அங்கு உரையாற்றிய எமது அரசியல் பிரமுகர்கள் மூவரும் பயனுள்ளதும் உறுதியானதுமான கருத்துக்களை முன்வைத்து அங்கு சுமூகமளித்த அனைவருக்கும் SCARBOROUGH HEALTH NETWORK வைத்திய அமைப்பின் சார்பிலும் ‘கனடா- யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்ற மருத்துவர்களின் சங்க’த்தைச் சேர்ந்த மருத்துவப் பெருந்தகைகள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பெற்றது.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.
—சத்தியன்

















