The ‘Ethnic Media and Social Media Appreciation Week Act, 2026,’ which, the Govt of Ontario proclaims to implement to honor Diverse Media outlets and Journalists,
Share
ஓன்றாரியோ அரசு பல்லின பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களை கௌரவிக்க அமுல்படுத்தவுள்ள ‘பல்லின பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகப் பாராட்டு வாரச் சட்டம், 2026,

கனடாவின் ஒன்ராறியோ ஒன்றாரியோ அரசாங்கம் மாகாணம் முழுவதும் உள்ள பல்லினப் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மாகாணத்தில் உள்ள பல்லின மக்களுக்கு நேர்த்தியான வகையிலும் உண்மையான செய்திகளை வழங்குவதிலும் தகவல் அளிப்பதிலும் அவர்களை இணைப்பதிலும் ஆற்றிவரும் முக்கியப் பங்கை அங்கீகரிக்கும் வகையில், இன ஊடக மற்றும் சமூக ஊடகப் பாராட்டு வாரச் சட்டம், 2026, (Ethnic Media and Community Media Appreciation Week Act, 2026) மசோதா 120 குறித்து மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் 04-11-2026 புதன்கிழமை அன்று சமர்ப்பித்து உரையாற்றினார்.
இன, பன்முக கலாச்சார மற்றும் பன்மொழி ஊடக வெளியீட்டாளர்களுக்கு ஒரு நற்செய்தி. என்ற வகையில் இந்தத் துறை 130 ஆண்டுகளுக்கும் மேலாக கனடிய மக்களுக்குச் சேவை செய்து வருகிறது; குறிப்பாக, கனடாவிற்குப் புதிதாகக் குடியேறியவர்களுக்கு, அவர்களின் புதிய வாழும் மண்ணான கனடாவின் உள்ளூர், மாகாண மற்றும் மத்திய அரசின் விவகாரங்கள் குறித்த தகவல்களை வழங்கி வருகிறன.
04-11-2026 புதன்கிழமை அன்று, 130 ஆண்டுகாலச் சேவைக்குப் பிறகு, ஒண்டாரியோ மாகாணச் சட்டமன்ற உறுப்பினர்கள் (MPPs) குழு ஒன்று, பாராளுமன்றச் செயலாளரும் Mississauga-Malton தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினருமான ஆனந்த் அவர்களின் வழிகாட்டலில், ‘இன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான பாராட்டு வாரச் சட்டம், 2026’ (Ethnic Media and Community Media Appreciation Week Act, 2026) எனும் 120-வது மசோதாவை இரண்டாம் வாசிப்பிற்காகச் சட்டமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த மசோதா, ஒன்றாரியோ மாகாணம் முழுவதும் உள்ள சமூகங்களுக்குத் தகவல்களை வழங்குவதிலும், அவற்றை ஒன்றிணைப்பதிலும் இன மற்றும் சமூக ஊடகங்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அங்கீகரிக்கிறது. மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் தீபக் ஆனந்த், அரிஸ் பாபிகியான் மற்றும் ஷெரிஃப் ஆகியோருடன், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு ஆதரவாகப் பேசினர். அன்றைய நாளில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் பத்திரிகைகள் மற்றும் வானொலி நிலையங்கள் தொடர்பாக பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
இறுதியில், அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது. இந்த முக்கியமான நிகழ்வின் போது, கனடாவின் மிகப்பெரிய பல்லின ஊடகங்களின் கழகமான Ethnic Press and Media Council சார்பாக, அதன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO), துணைத் தலைவர்களான டிமிட்ரிஸ் வோஹைடிஸ் மற்றும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நாகமணி லோகேந்திரலிங்கம், மற்றும் தமிழ் சமூக ஊடகங்களான ‘பிகைன்ட் மீ’ ஊடகம் சார்பில் அதனை நிர்வாக இயக்குனர் கனேந்திரன் செல்வராஜா மற்றும் ‘தேசம்’ பத்திரிகையின் சார்பில் அதன் வெளியீட்டாளர் ராம்சங்கர் சிவநாதன் உட்பட பல உறுப்பினர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மசோதாவைச் சமர்ப்பித்து ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்கள், ‘கனடிய பல்லினப் பத்திரிகையாளர் கழகத்தின்’ (National Ethnic Press and Media Council of Canada) உறுப்பினர்களுடன் இணைந்து படத்தில் காணப்படுகின்றனர். இந்த மசோதா தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த ‘கனடிய பல்லினப் பத்திரிகையாளர் கழகத்தின்’ தலைவர் தோமஸ் சாரஸ் அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்த மசோதாவிற்கு ஆதரவளித்த சட்டமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மசோதா, இந்தத் துறையின் சவால்களையும் அதன் முக்கியத்துவத்தையும் அங்கீகரிக்கிறது.
உங்கள் அனைவருக்கும் நன்றி. என்று குறிப்பிட்டார்

Great News for the publishers of ethnic/ multicultural and multilingual publications. The sector of the industry is serving members of the Canadian people for more than 130 years, informing mostly new Canadian Immigrants about the civic, provincial and federal affairs of their new home.
Yesterday, and after 130 years of existents and provision of services to Canadian public, a group of MPP’S, members of the Legislative Assembly of the province of Ontario, under the leadership of Deepak Anand, introduced for the second reading of bill 120, Ethnic Media and Community Media Appreciation Week Act, 2026.
The Bill is recognizing the important role the ethnic and community media play in informing and connecting communities across Ontario. In favor of the bill spoke the MPP Deepak Anand, Aris Babikian and Sharif along with MPP of the three parties of the opposition The Bill finally pass with the support of all the members and also all the parties of the Assembly. Representing the ethnic Press and Media Council during this important event were presented at the’ Queens Park ‘Assembly the president and CEO of the organization, the Vice Presidents Dimitris Vohaitis,UTHAYAN Logan Nagamany Logendralingam and a number of member publishers.
In the picture, the MPP’S introduced and supported the Bill along with the members of the National Ethnic Press and Media Council of Canada. Taking this opportunity I want to express our gratitude to leadership of all political parties of the Assembly for their support of this Bill, which recognizes the struggles and the importance of the sector.
Thank you all.
Thomas S. Saras
President and CEO














