LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

Share

(21-12-2021)

தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று காலை 11.00 மணிக்கு கொழும்பில் ரெலோவின் முன்னெடுப்பில் சிறப்புடன் ஆரம்பமாகியுள்ளது.

02ம் திகதி நவம்பர் 2021 திண்ணையில் நடந்த சந்திப்பு மற்றும் 12-02-2021ம் ஆண்டு கொழும்பில் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவும் இக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே எமது உறுதியான நிலைப்பாடு.

அதுவே எமது அரசியல் இலக்கு. அதில் ஒருபோதும் விட்டுக் கொடுப்புக்கு இடம் இல்லை.
ஆனால் ஏற்கனவே அரசியல் அமைப்பில் உள்ள 13யு முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்கள் விரைவில் நடாத்தப்படவேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்த இந்திய அரசிடம் கோரிக்கை சமர்ப்பிக்கும் வரைபை இறுதி செய்யும் முயற்சியில் இக்கூட்டம் நடைபெறுகிறது.என ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்