LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்க முதலாளிகள் மறுப்பு

Share

இலங்கையில் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறைகளின் தலைவர்களான முதலாளிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஏற்றுமதி வருவாய் சரிவு, கட்டண உயர்வு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, மூலப்பொருட்கள் இறக்கு மதி மற்றும் செலவுகள் அதிகரிப்பு மற்றும் வங்கிகள் அறவிடும் அதிக வட்டி வீதங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி அவர்கள் இந்த விசேட கொடுப்பனவை மறுத்துள்ளனர்.