LOADING

Type to search

இலங்கை அரசியல்

“அனைத்துலகத் தமிழர் பேரவையை அரசியல் கலப்பற்ற ஒரு ஜனநாயகக் கட்டமைப்பாக உருவாக்குவதே எமது நோக்கம்”

Share

இணைய வழி கலந்துரையாடலில் அமைப்பின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி விளக்கமாக எடுத்துரைப்பு!

“எமது அனைத்துலகத் தமிழர் பேரவை அமைப்பை, இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் வாழும் மக்களை அங்கத்தவர்களாகக் கொண்டு அரசியல் கலப்பற்ற ஒரு ஜனநாயகக் கட்டமைப்பாக உருவாக்குவதே எமது நோக்கமாகும். எனினும் எமது சேவைகளில் நாம் முன்னுரிமை வழங்குவது எமது தாயகத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடக்கம் அங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் அதன் தலைவனோ அன்றி தலைவியோ பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து நீங்கி தங்கள் வாழ்வையும் பிள்ளைகளில் கல்வியையும் இடையூறுகள் இன்றி மேற்கொள்வதற்குரிய பங்களிப்பை வழங்குவதாகும். அதற்காக எமது தமிழர் தாயகத்தில் பொருளாதார வருவாய்களை பெற்றுக்கொள்ளக்கூடிய தொழிற்துறை, உற்பத்தி அல்லது விவசாயம் அல்லது ஏனைய துறைகளில் புலம் பெயர் முதலீட்டாளர்களை உட்கொண்டு வருவதற்கான திட்டமும் எமது முதன்மை நோக்கங்களில ஒன்றாகும்.”

இவ்வாறு கடந்த 07-11-2026 அன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற அமைப்பின் இணையவழி கூட்டத்தில் தலைமையுரையாற்றும் போது தெரிவித்தார்.

“அனைத்துலகத் தமிழர் பேரவை” அமைப்பை அரசியல் கலப்பற்ற ஒரு ஜனநாயகக் கட்டமைப்பாக உருவாக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழர்களை அமைப்பில் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளும் வகையிலும் தொடர்ந்து கட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக நிர்வாக அலகுகளை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதும் ஆகும் என இணைய வழி கலந்துரையாடலில், அமைப்பின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி விளக்கமாக எடுத்துரைத்தார்!

அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT), இடைக்கால நிர்வாகச் சபையிலிருந்து உறுப்பினர்களால் மக்களாட்சித் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் நிர்வாக அமைப்புக்கு எவ்வாறு மாறவுள்ளது என்பதை விளக்கும் கலந்துரையாடலாக நகர்ந்து சென்ற இந்த இணையவழிக் கூட்டத்தில் உலகின் பல நாடுகளிலிருந்தும் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மேலும் அனைத்துலகத் தமிழர் பேரவையில் உறுப்பினராக இணைவது எப்படி என்பதையும், இந்த மாற்றத்தில் இணைந்து கொள்பவர்கள் எவ்வாறு பங்கேற்கலாம் என்பதையும் இந்தக் கலந்துரையாடலில் அவர் விளக்கமாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது