LOADING

Type to search

சினிமா

அருள்நிதியின் கலக்கல் கூட்டணி… பேசப்பட்டு வரும் டி பிளாக் படத்தின் முன்னோட்டக் காட்சி

Share

நடிகர் அருள்நிதி லீட் கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள படம் டி பிளாக்.
அருள்நிதியின் 15வது படமான டி பிளாக்கின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது ட்ரெயிலரும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. வம்சம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் தன்னை நடிகராக அறிமுகப்படுத்திக் கொண்ட அருள்நிதி தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது மௌனகுரு, டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், பிருந்தாவனம் மற்றும் கே 13 ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன. இந்நிலையில் யூடியூபில் எருமசாணி மூலம் புகழ்பெற்ற விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 15வது படத்தில் நடித்து முடித்துள்ளார் அருள்நிதி. இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. அமானுஷ்யத்தை கையில் எடுத்துள்ள இயக்குநர் அதை சிறப்பான வகையில் காட்சிப்படுத்தியுள்ளது ட்ரெயிலரின் காட்சிகள் மூலம் தெரிகிறது.

படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரித்துள்ளார். இதனிடையே படத்தை சக்தி பிலிம் பேக்டரி தற்போது கைப்பற்றியுள்ளது. படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்திற்கு சமீபத்தில் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாகியுள்ளார் அவந்திகா. படத்திற்கு மாயா படத்தில் இசையமைத்துள்ள ரான் யோஹன் இசையமைத்துள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி பின்புலத்தை மையமாக கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் அருள்நிதியின் கைகளில் அடுத்ததாக டைரி, தேஜாவு உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்தப் படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளன.