‘மக்கள் திலகம்’ – “பொன்மனச் செம்மல்” அமரர். எம் ஜி ராமச்சந்திரன் அவர்களது 105 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
Share
நான் கண்டன் ராமபிரான்
சூரியக் கதிரொன்று
வீரியம் மிகவே கொண்டு
கரியமால் அம்சமொடு
ஆரிய ராமன் போன்று – ஆங்கே
வாய்மையின் வடிவமான
சத்யாதாய் உதரத்தில்
உதித்தனன் தேவமைந்தன்!
பதித்த நல் நாமமோ ராமச்சந்திரன்,
பாரிலே உதித்த மைந்தன்
பாரிபோல் குணமே கொண்டான்;
யாரிவன் தேரோட்டி மகனேயான
பாரத கர்ணனோ! மாரி போல் வழங்கி நின்றான்!
யாருமே இவனைப் போன்று
இறந்தபின் வாழ்ந்ததில்லை!
இறவாத புகழுடைய ‘ராமச்சந்திரன்’
நீடூழி வாழ்க மாதோ!
வீணை மைந்தன்
பின் குறிப்பு 2017 மக்கள் திலகம் 100வது ஆண்டு பிறந்தநாள் விழா மொன்றியல் நகரில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டது வரலாறாகும்













