LOADING

Type to search

சினிமா

இந்திக்கு போகும் அஜித் படம் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Share

நடிகர் அஜித்குமார் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் விஸ்வாசம். நடிகர் அஜித்துக்கு பாலிவுட்டிலும் சிறப்பான சந்தை மதிப்பு காணப்படுகிறது. அவரது வலிமை படம் இந்தியிலும் மறு பதிப்பு செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட உள்ளது. நடிகர் அஜித்குமார் தொடர்ந்து சிறப்பான படங்களை சமூக அக்கறையுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படம் பாலிவுட்டின் பிங்க் படத்தின் மறுபதிப்பாக உருவாகி வெளியானது. தொடர்ந்து அவர் எச் வினோத் -போனி கபூர் கூட்டணியில் இரண்டாவது முறையாக இணைந்து வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கடந்த தீபாவளி வெளியீடாக திட்டமிடப்பட்டு அதிலிருந்து விலகி பொங்கலுக்கு வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், பொங்கல் வெளியீடிலிருந்தும் வலிமை படம் பின்வாங்கியது. தற்போது படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலிவுட்டில் நடித்துள்ள அஜித்குமாருக்கு அங்கும் ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதையொட்டி தற்போது இந்தப் படம் இந்தியிலும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித், நயன்தாரா, ஜெகபதிபாபு லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2019ல் வெளியான விஸ்வாசம் படத்தை மறுபதிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னுடைய மகளை பிரிந்து வாழும் அஜித், அவருடைய கனவை அடைவதற்காக அவருக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அஜித்துக்கு இணையாக இந்தியில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.