இந்தியில் மறுபதிப்பாகும் விஜய்யின் மெர்சல் திரைப்படம்
Share
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மெர்சல். அட்லி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான வசூல் சாதனையை படைத்தது. விஜய் 3 வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏஆர் ரஹ்மான். நடிகர் விஜய் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான மெர்சல் படத்தில் அவர் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தப் படம் கடந்த 2018ம் ஆண்டிற்கான சிறந்த அயல்நாட்டு படம் என்ற விருதை பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் பெற்றது. அட்லி இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்த விஜய்க்கு இந்தப் படமும் சிறப்பான வெற்றிப் படமாக அமைந்தது.
இதையடுத்து மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து முடித்தாலும் மெர்சல் படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் சிறப்பான ஆதரவை கொடுத்து வருகின்றனர். இந்தப் படம் வசூல் மழையையும் பொழிந்த நிலையில், தற்போது இந்தப் படம் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாகுபதி, கேஜிஎஃப் படங்களின் வெற்றியால் பான் இந்தியா படங்களில் நடிக்க நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விஜய்யின் 66வது படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது. தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களின் படங்களும் பான் இந்தியா படங்களாக வெளியாக உள்ளன. சமீபத்தில் அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
வசூலையும் வாரிக் குவித்துள்ளன. இதையடுத்து அவரது அலா வைகுந்தபுரமுலு படத்தையும் இந்தியில் டப் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய்யின் மெர்சல் படத்தையும் இந்தியில் டப் செய்து அடுத்த மாதத்தில் திரையரங்கில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல ராம்சரணின் ரங்கஸ்தலம் படத்தையும் அடுத்த மாதத்தில் டப் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.













