LOADING

Type to search

சினிமா

வெளியீடுக்கு தயாராகும் விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படம்

Share

மற்ற நடிகர்களின் படங்களின் வெளியீடு தேதி அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான விஜய்யின் பீஸ்ட் படமும் வெளியீடுக்கு தயாராகி வருகிறதாம். இது பற்றிய புதிய பதிவேற்றம் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல், ஊரடங்கு காரணமாக ஜனவரியில் வெளியீடு செய்ய முடியாமல் பீஸ்ட் உள்ளிட்ட பல படங்கள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வ்ந்ளியீடை அறிவித்து வருகின்றன.

இதனால் பீஸ்ட் படத்தை எதிர்பார்த்திருக்கும் விஜய் ரசிகர்கள், அது பற்றி எந்த பதிவேற்றமும் இல்லையே என கவலையில் உள்ளனர். பீஸ்ட் படம் ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வரும் நிலையில், மற்றொரு தகவலாக ஏப்ரல் 28 ல் தான் பீஸ்ட் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். பீஸ்ட் பதிவேற்றத்தை வெளியிடும் படி சன் பிக்சர்ஸ் மற்றும் நெல்சன் திலீப்குமாரிடம் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் புதிய தகவலாக, விஜய்யின் பீஸ்ட் படத்தின் பின்னணி குரல் பதிவு வேலைகள் முழுவதுமாக முடிந்து விட்டதாம். மிக விரைவில் மற்ற வேலைகளும் துவங்கப்பட உள்ளதாம். ஏப்ரல் 14 ம் தேதி பீஸ்ட் படத்தை வ்ந்ளியீடு செய்யவே படக்குழு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

ஏப்ரல் 14 ம் தேதி பீஸ்ட் படம் வெளியீடு செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே விக்கிபீடியாவிலும் பதிவிட்டு விட்டார்கள். அதில் அனிருத், பீஸ்ட் பாடல்களுக்கு இசையமைக்கும் வேலையை நவம்பர் மாதத்திற்கு முன்பே முடித்து விட்டதாகவும், தீபாவளிக்கு வெளியீடு செய்யப்படுவதாக இருந்த பீஸ்ட் படத்தின் பதாகைகள், ரஜினியின் அண்ணாத்த வெளியீடு, கன்னட நடிகர் புனிதா ராஜ்குமாரின் திடீர் மரணம், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி போன்ற விஷயங்களால் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தின் குரல் பதிவு முடிந்து விட்டதால் விரைவில் முன்னோட்டக் காட்சி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 14 ம் தேதி காதலர் தின சிறப்பு நிகழ்வாக பீஸ்ட் படத்தின் பாடல்கள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் வரிகளில் விஜய் பாடிய பாடல் தான் வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்படுவதால் கார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 13 ம் தேதி பாடல்கள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.