ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெறவில்லை
Share
2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழா மார்ச் மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளது. 10 பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே படங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதன் இறுதிப்பட்டியலுக்கான பரிந்துரை வ்ந்ளியாகியுள்ளது. அதில் சிறந்த படத்துக்கான இறுதிப்பட்டியலுக்கான பரிந்துரை பட்டியலில் தமிழ் திரையுலகமே பெரிதும் எதிர்பார்த்த ஜெய்பீம் படம் இடம்பெறவில்லை.
இந்நிலையில் ஜெய்பீம் படம் இவ்வளவு தூரம் பயணித்ததே பெருமையான விஷயம் என்றும், நாம் முயற்சி செய்தோம். அவ்வளவுதான் என்றும் மீம்ஸ்களை பகிர்ந்து பலரும் ஆறுதல் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக நொய்டாவில் நடைபெற்ற 9வது சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படம் 3 விருதுகளை பெற்றது. சிறந்த படம், சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை லிஜோமொள் ஜோஸ் என 3 விருதுகளை தட்டிச் சென்றது குறிப்பிடதக்கது.
நடிகர் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தில் ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இருளர் சமூகத்தினர் அனுபவிக்கும் கொடுமைகளை 28 வருடத்திற்கு முன்னால் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி தள்ளினர்.













